உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 132 பேரிடம் ரூ. 1.82 கோடி மோசடி

132 பேரிடம் ரூ. 1.82 கோடி மோசடி

புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் வங்கி, நிதி நிறுவனங்கள் பெயர்களில் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி 132 பேரிடம் 1.82 கோடி ரூபாயை அபகரித்த மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரியில் கடந்த 6 மாதங்களாக வங்கி கடன் தரும் மேலாளர் பேசுகிறேன். குறைந்த வட்டியில், லோன் தருகிறோம், ஜாமின்தாரர்கள் தேவையில்லை, உங்களின் வங்கி பரிவர்த்தனை வைத்து கடன் கொடுக்கிறோம் எனவும், பிரபல தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் இருந்து பேசுவதாக கூறி கடன் பெற அழைக்கின்றனர்.அவசரத்திற்கு பணம் தேவையுடன் காத்திருக்கும் நபர்களை கண்டறிந்து இன்சூரன்ஸ், ப்ராசசிங் கட்டணம் என கூறி ரூ. 2,000 முதல் ரூ. 16 லட்சம் வரை மோசடி செய்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த 5 மாதத்தில் மட்டும் 132 புகார்கள் வந்துள்ளது. இதில், ரூ. 1.82 கோடி பணத்தை மோசடி பேர்வழிகளிடம் பொதுமக்கள் இழந்துள்ளனர்.சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'குறைந்த வட்டிக்கு கடன் அளிக்கிறோம். பிரபல வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் பெயர்களை சொல்லி பொதுமக்களை ஏமாற்றுவது அதிகரித்துள்ளது.இவை அனைத்தும் போலியாக மொபைல் ஆப் டவுன்லோடு செய்ய வைத்து பணம் பறித்து கொள்கின்றனர். இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை