உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நீட் அல்லாத படிப்புகளில் சேர 13,526 பேர் விண்ணப்பம்; செவிலியர் நுழைவு தேர்வினை 2211 பேர் எழுதுகின்றனர்

நீட் அல்லாத படிப்புகளில் சேர 13,526 பேர் விண்ணப்பம்; செவிலியர் நுழைவு தேர்வினை 2211 பேர் எழுதுகின்றனர்

புதுச்சேரி : சென்டாக் நீட் அல்லாத படிப்புகளுக்கு 13,526 பேரும் செவிலியர் நுழைவு தேர்விற்கு 2,211 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் செவிலியர் கல்லுாரிகளில் உள்ள பி.எஸ்சி., நர்சிங் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு புதுச்சேரி நர்சிங் கவுன்சில் நடத்தும் பொது நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த பொது நுழைவு தேர்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்பம் www.centacpuducherry.inஎன்ற இணையதளத்தில் கடந்த 14ம் தேதி முதல் வரவேற்கப்பட்டு வந்தது. இதேபோல் நீட் அல்லாத படிப்புகளுக்கு கடந்த மாதம் 12ம் தேதி முதல்வர் விண்ணப்பம் வரவேற்கப்பட்டு வந்தது. இந்த இரண்டு படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 7ம் தேதி நள்ளிரவு 12:00 மணியுடன் காலக்கெடு முடிந்தது.

செவிலியர் நுழைவு தேர்வு

நர்சிங் நுழைவு தேர்வினை பொருத்தவரை 2,334 பேர் விண்ணப்பிக்க பதிவு செய்திருந்தனர். இதில் 2,211 பேர் விண்ணப்பித்துள்ளனர். காரைக்காலில் இருந்து 464, ஏனாம் 54, மாகி 82, புதுச்சேரியில் 1,611 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதேபோல் பி.டெக்., உள்ளிட்ட நீட் அல்லாத படிப்புகளுக்கும் விண்ணப்பம் குவிந்துள்ளன. நீட் அல்லாத படிப்புகளில் சேர 15,993 பேர் விண்ணப்பிக்க இ-மெயில் கொடுத்து பதிவு செய்திருந்தனர். இதில் 13,526 பேர் ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பித்துள்ளனர்.கலை அறிவியல் படிப்பிற்கு 3,227, தொழில் படிப்பிற்கு 6,388 பேர் விண்ணப்பித்துள்ளனர். கலை அறிவியல் தொழில் படிப்புகளுக்கு சேர்த்து 3,911 பேர் விண்ணப்பம் போட்டுள்ளனர். உயிரியல் சார்ந்த படிப்புகளுக்கு 5,200 பேர், பி.பார்ம்படிப்பிற்கு 4,586, அக்ரி 2673, பி.டெக்., 6344, சட்டம் 1469, டி.ஐ.பி., 1644, டி.ஏ.என்.எம்.,971, பி.வி.ஓ.சி., 1,099 பேர்விண்ணப்பித்துள்ளனர். பிராந்திய ரீதியாக பார்க்கும்போது புதுச்சேரி 11,071, பிற மாநிலங்களில் இருந்து 2,448, என்.ஆர்.ஐ., 2 என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு 6 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப பரீசிலனைக்கு பிறகு மெரிட் லிஸ்ட் விரைவில் வெளியிடப்படும் என சென்டாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை