மேலும் செய்திகள்
புகார் பெட்டி
11-Sep-2024
பாகூர் : பாகூரில் 15 லிட்டர் சாராயத்தை, போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பாகூர், ஏரிக்கரை வீதியில் சாராயக்கடை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக, பல்வேறு போராடங்களிலும் ஈடுபட்டு, அங்கு இயங்கி வந்த சாராயக் கடையை அப்புறப்படுத்தினர். இந்நிலையில், ஏரிக்கரை அருகே சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை அங்கு திரண்டு சென்றனர்.உடனே, அங்கிருந்தவர்கள் சாராய பாக்கெட்டுகளை போட்டு விட்டு தப்பிச் சென்றனர். இதனிடையே, அங்கு வந்த பாகூர் போலீசார், 180 எம்.எல்., அளவு கொண்ட 84 சாராய பாக்கெட்டுகளை (15 லிட்டர்) பறிமுதல் செய்து, தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11-Sep-2024