மீனவர் வலையில் சிக்கிய 1.5 டன் ராட்சத திருக்கை மீன்
வலையில் சிக்கிய, 1.5 டன் எடை கொண்ட ராட்சத திருக்கை மீனை, மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர்.வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் விசை படகு மூலம் நேற்று முன்தினம் இரவு மீன் பிடிக்க மீனவர்களுடன் கடலுக்கு சென்றார். மீன் பிடித்து கொண்டிருக்கும் போது, வலை கடல் உள்ளே இழுந்து சென்றது.படகில் இருந்தவர்கள் பெரிய மீன், வலையில் சிக்கியதை உணர்ந்தனர். வலையில், சிக்கியது ராட்சத திருக்கை மீன் என, தெரிய வந்தது. அதனை தேங்காய்த்திட்டு துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அடுத்த சில சிமிடங்களில் இறந்தது. மீனவர்கள் கூறுகையில், 'வலையில் சிக்கிய மீன், கோட்டுவாலன் திருக்கை இனத்தை சேர்ந்தது. அதன் எடை 1.5 டன் எடை இருக்கும். இதனை இங்கு யாரும் சாப்பிட மாட்டார்கள். திருக்கை மீனை கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த திருக்கை மீனை சீன நாட்டினர் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்' என்றனர்.