2 பி.சி.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கல்
புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் பணியாளர் பிரிவு சார்பில், பி.சி.எஸ்., அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்புகள் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டப் பதிவாளராக உள்ள மாணிக்கதீபன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனிப்பார். துறைமுக இயக்குநராக உள்ள மோகன் குமார், பள்ளிக் கல்வி இயக்குநர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனிப்பார். தற்போது வகித்து வரும் பொறுப்புகளுடன், புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இந்தக் கூடுதல் துறைப் பொறுப்புகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்கள் என்று தெரிவிக்கபப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை அரசின் சார்புச் செயலாளர் முருகேசன் பிறப்பித்துள்ளார்.