உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் திருட்டு வழக்கில் 2 பேர் கைது

பைக் திருட்டு வழக்கில் 2 பேர் கைது

திருபுவனை : திருபுவனை அருகே பைக் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். 3 பைக்குகளை பறிமுதல் செயதனர்.புதுச்சேரி, திருபுவனை அடுத்த கலித்தீர்த்தாள்குப்பம் வி.கே நகரை சேர்ந்தவர் ரகு, 44; இவரது பைக் கடந்த 1ம் தேதி இரவு திருடு போனது. புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக் குப் பதிந்து விசாரித்தனர்.இந்நிலையில் சப் இன்ஸ்பெக்டர் குமரவேலு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியே குடிபோதையில் பைக்கை வேகமாக ஓட்டிச் சென்ற வரை பிடித்து விசாரித்தனர். அவர் விழுப்புரம், மருதுாரை சேர்ந்த வெங்கடேசன், 49, என்பதும், அவர் ஓட்டி வந்த பைக் கலிதீர்த்தாள்குப்பத்தில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வெங்கடேசனை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.மேலும், அவர் புதுச்சேரி ஒதியஞ்சாலை மற்றும் ரெட்டியார்பாளையம் பகுதி களில் 2 பைக்குகள் திருடியதும், அதனை விழுப்புரம், கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த மெக்கானிக், அஜித், 27; என்பவரிடம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அஜித்தை கைது செய்து அவரிடம் இருந்து 2 பைக்கு களை பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.வெங்கடேசன் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் 15 பைக் திருட்டு வழக்குகள் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி