உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குடி போதையில் தகராறு 2 பேர் கைது

 குடி போதையில் தகராறு 2 பேர் கைது

திருக்கனுார்: திருக்கனுாரில் குடிபோதையில் பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். காட்டேரிக்குப்பம் அடுத்த லிங்காரெட்டிப் பாளையம், கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே வாலிபர் ஒருவர், குடிபோதையில் அவ்வழியாக செல்லும் பொது மக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்டு வருவதாக காட்டேரிக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட வி.பரங்கனியை சேர்ந்த சதீஷ், 34; என்பவரை கைது செய்தனர். இதேபோல், திருக்கனுார் ஏரிக்கரை அருகே குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட விழுப்புரம், ஓடுவான்குப்பத்தை சேர்ந்த ஜெகதீசன், 33; என்பவரை திருக்கனுார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ