உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ம.க., பிரமுகர் வெட்டப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

பா.ம.க., பிரமுகர் வெட்டப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

காரைக்கால்: காரைக்காலில் பா.ம.க., பிரமுகரை வெட்டிய வழக்கில், 2 பேரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால், திருநள்ளார், நெய்வாச்சேரி பகுதியை சேர்ந்தவர் சிவம், 49; பி.பி.சி.எல்., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், பா.ம.க., பிரமுகர். அதே பகுதியைச் சேர்ந்த நந்தா என்பவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சிவம் சாட்சியாக உள்ளார்.இந்நிலையில், கடந்த 16ம் தேதி இரவு ஒரு கும்பலால் சிவம் வெட்டப்பட்டார். இதுகுறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், சிறையில் உள்ள நந்தா துாண்டுதலின் பேரில், மாதேஷ், அப்துல் ரகுமான், பாலா, கார்த்திக், ரகு, சந்தோஷ் ஆகியோர் தாக்கியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் நேற்று பச்சூர் பகுதியை சேர்ந்த ரகு 19; மரைக்காயம் வீதியைச் சேர்ந்த சந்தோஷ், 22; ஆகிய இருவரையும் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும், மாதேஷ், அப்துல் ரகுமான், பாலா, கார்த்திக் ஆகிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை