மேலும் செய்திகள்
போப் பிரான்சிஸ் மறைவு: சேலம் ஆயர் அஞ்சலி
23-Apr-2025
புதுச்சேரி : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, இந்தியாவில் நேற்றும், இன்றும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் நாளில் தனியாக ஒரு நாள் துக்கம் அனுச்சரிக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் நாடு முழுதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்; அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாது என, அறிவித்துள்ளது. அதன்படி, புதுச்சேரியில் நேற்றும், இன்றும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கவர்னர் மாளிகை, சட்டசபை, தலைமை செயலகம், போலீஸ் தலைமையகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
23-Apr-2025