உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த 2 பேர் கைது

ரகளை செய்த 2 பேர் கைது

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.கிருமாம்பாக்கம் போலீஸ் சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, முள்ளோடை சந்திப்பு பகுதியில் இரண்டு பேர், ஆபாசமாக திட்டிக் கொண்டு, ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கடலூர் கோண்டூர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் 32; தேவனாம்பட்டினம் பிரகாஷ் 25; என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை