உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போது இடத்தில் மது அருந்திய 2 பேர் கைது.

 போது இடத்தில் மது அருந்திய 2 பேர் கைது.

காரைக்கால்.மார்ச் 10 -: காரைக்காலில் பொது இடத்தில் மது அருந்திய இருவரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பொது இடத்தில் மது அருந்திய இருவர் , பொதுமக்கள் இடையூறாக ஆபாசமாக பேசினர். போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி திருக்கடையூர் பகுதியை சேர்ந்த மாதவன், 27; மற்றும் அதே பகுதியை சேர்ந்த திவான், 21; எனத் தெரியவந்தது. ் கோட்டுச்சேரி போலீசார் இருவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி