உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

புதுச்சேரி:: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.லாஸ்பேட்டை அடுத்த கருவடிக்குப்பம் பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான்மசாலா பொருட்கள் விற்பனை செய்வதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அங்கு சென்று சோதனை செய்த போது, கடையில், குட்கா உள்ளிட்ட பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். கடை உரிமையாளர் சுப்ரமணி, 55, என்பவரை கைது செய்தனர். அதே போல, மாகி அடுத்த பரக்கால் மெயின் ரோட்டில், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்ற பிரசாந்த், 52, என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை