மேலும் செய்திகள்
‘குட்கா’ விற்பனை 4 பேர் மீது வழக்கு
06-Nov-2026
திருபுவனை: திருபுவனை பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி புகையிலை கட்டுபாட்டு பிரிவு ஆலோசகர் டாக்டர் சூர்யகுமார் திருபுவனை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, திருபுவனை போலீசார் சோதனை செய்ததில், ராதாகிருஷ்ணன் நகரில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற அதே பகுதியை சேர்ந்த சிங்காரம் மகன் சோலையப்பன் என்பவரை கைது செய்து 3.046 கிலோ புகையிலலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல், பெருமாள் கோவில் உள்ள பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற திருபுவனை ராமு மனைவி ரமணி, 47, என்பவரை கைது செய்து 3 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
06-Nov-2026