உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 2 கிராம மீனவர்கள் சமாதான கூட்டம்

2 கிராம மீனவர்கள் சமாதான கூட்டம்

அரியாங்குப்பம் : சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித்தது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையை அடுத்து,இரு கிராம மீனவர்கள் சமாதான கூட்டம் வீராம்பட்டினத்தில் நடந்தது.சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித்தது தொடர்பாக வீராம்பட்டினம் - நல்லவாடு மீனவர்கள் இடையே கடந்த இரண்டு ஆண்டுக்கு முன், பிரச்னை ஏற்பட்டு கலவரமாக மாறியது. இது சம்பந்தமாக, தமிழக மற்றும் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்நிலையில், வீராம்பட்டினம் மக்கள் குழு சார்பில், இரண்டு மீனவ கிராமத்திற்கும் இடையே சமாதான கூட்டம் வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் நடந்தது. கூட்டத்தில், வீராம்பட்டினம், நல்லவாடு தெற்கு மற்றும் வடக்கு கிராம பஞ்சாயத்தார்கள், அனைத்து வித படகுகள் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கடலில் ஏற்படும் பிரச்னைகளை, இரு மீனவ கிராமத்தினர் பேசி தீர்த்து கொள்ள வேண்டும். சுருக்குவலை தொடர்பாக, தமிழக நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை