உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மினி லாரி மோதி 2 பெண்கள் படுகாயம்

 மினி லாரி மோதி 2 பெண்கள் படுகாயம்

பாகூர்: மினி லாரி மோதிய விபத்தில், இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர். தவளக்குப்பம் அடுத்த புதுகுப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் இசைஅமுதன் மனைவி ஸ்ரீஜா, 29; இவர் கடந்த 29 ம் தேதி தனது உறவினர் ரேஷ்மா, 19; என்பவரை அழைத்து கொண்டு தனது சுசூகி அக்சஸ் ஸ்கூட்டரில் அரியாங்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அரியாங்குப்பம் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, பின்னால் வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இருவரும், அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !