உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடலுாரில் வழிப்பறி 2 வாலிபர்கள் கைது

கடலுாரில் வழிப்பறி 2 வாலிபர்கள் கைது

கடலுார்: கடலுாரில் சிறுவனிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கடலுார், பாதிரிக்குப்பத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் ஜவான்ஸ் பவன் சாலையில் நண்பர்களுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது, பைக்கில் வந்த 2 வாலிபர்கள், சிறுவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, 16 வயது சிறுவன் வைத்திருந்த மொபைல் போன் மற்றும் ரூ.1,500 பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் வழிப்பறியில் ஈடுபட்ட கடலுார் சுப்ராயலு நகரை சேர்ந்த கலைச்செல்வன் மகன் விக்னேஷ்,19; குப்பன்குளம் ஜெயக்குமார் மகன் கிேஷார்,23; ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை