உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது

 கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது

புதுச்சேரி: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் கல்மேடு சந்திப்பு பகுதியில் இரண்டு வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டுவதாக, மேட்டுப்பாளையம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அந்த இடத்திற்கு சென்று 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில், கல்மேடு பேட் பகுதியை சேர்ந்த கேப்ரியல்ராஜ் ஆலன், 25; வில்லியனுாரை சேர்ந்த அருள்முருகன், 25; என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை