உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பல்கலையில் 2.0 மரம் நடவு நிகழ்ச்சி

புதுச்சேரி பல்கலையில் 2.0 மரம் நடவு நிகழ்ச்சி

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் 'வளர்ந்த பாரதம் இளைஞர் இணைப்பு' மற்றும் 'அம்மாவின் பெயரில் ஒரு மரம்' என்ற பிரசார முகாம், 2.0 மரம் நடவு நிகழ்ச்சி நடைபெற்றது. துணை வேந்தர் பிரகாஷ்பாபு, முதல் நாற்றை நட்டு துவக்கி வைத்தார். இங்கு, கற்பகம், மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம், கொய்யா, நெல்லிக்காய், நீலச்செடி உட்பட 65க்கும் மேற்பட்ட பல்வேறு பழம் தரும் மரங்கள் இந்த வளாகம் முழுதும் நடப்பட்டது. நிகழ்ச்சியில், துணை வேந்தர் பிரகாஷ்பாபு பேசியதாவது: மரங்கள் கார்பன் டயாக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுவதால் காற்றின் தரம் மேம்படுத்தி, காற்று மாசை பாதிக்காமல் மாணவர்கள், பணியாளர்கள் சுவாசிக்க ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறது. மரங்களின் நிழல் வெளி பகுதிகளிலும், கட்டடங்களை சுற்றிலும் வெப்பத்தை குறைக்கிறது. பறவைகள், பூச்சிகள், சிறு விலங்குகளுக்கு இயற்கை வாழ்விடமாக அமைந்து, உயிரி பல்வகைமைக்கு ஆதரவளித்து உள்ளூர் சூழல் செழிக்க உதவுவதாக தெரிவித்தார். துறை தலைவர்கள், பேராசிரியர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை