போலீஸ் மக்கள் மன்றத்தில் 25 மொபைல்கள் ஒப்படைப்பு
புதுச்சேரி: புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் மக்கள் மன்றம் எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் நடந்தது.இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.இதில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை தெரிவித்தனர்.தொடர்ந்து, பொதுமக்கள் தவறவிட்ட 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 25 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.எஸ்.பி., பாஸ்கரன் பேசுகையில், 'போலியான உடனடி கடன் செயலி மூலம் கடன் பெற்றால், உங்கள் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, நண்பர்களுக்கு அனுப்புவதாக மிரட்டும் செயல் அதிகரித்து வருகிறது. ஆகையால் உடனடிக் கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம். வாட்ஸ் ஆப், டெலிகிராம் குழுக்களில் தெரியாத நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங் சம்பந்தமான அறிவுரைகளை முற்றிலும் நம்ப வேண்டாம்' என்றார்.