சங்கராபுரம் சார் பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; கணக்கில் வராத ரூ.2.53 லட்சம் பறிமுதல்
சங்கராபுரம் : சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத 1.13 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் டி.எஸ்.பி., சத்தியராஜ் உத்திரவின்பேரில் இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை 4:00 மணி அளவில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது ஆவண எழுத்தர் மற்றும் இடைத்தரகர்களிடம் இருந்து கணக்கில் வராத 1 லட்சத்து 13 ஆயிரத்து 900 ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சார்பதிவாளர் ஆசைதம்பி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மரக்காணம்
மரக்காணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணம் 1.40 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.மரக்காணம் சார் பதிவாளர் அலுவலகத்தில், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., அழகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர்கள் சக்கரபாணி, கோபிநாத் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று மதியம் திடீர் சோதனை நடத்தினர். அப்போது உதவி சார் பதிவாளர் ஜெகதீஸ்வரி (பொறுப்பு) பணியில் இருந்தார். அலுவலகத்தில் இருந்த பத்திரப்பதிவு எழுத்தர் மற்றும் இடைத்தரகர்களிடம் இருந்து கணக்கில் வராத பணம் 1.40 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையின்போது, புரோக்கர்கள் மற்றும் பத்திரப்பதிவு எழுத்தர்கள் சிலர் தங்கள் அலுவலக கதவை மூடிவிட்டு ஓட்டம் பிடித்தனர்.