உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போதையில் ரகளை: 3 பேர் கைது

 போதையில் ரகளை: 3 பேர் கைது

புதுச்சேரி: பொது இடத்தில் மது போதையில் ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். முத்தியால்பேட்டை, பெருமாள் கோவில் தெருவில், 2 பேர் மது போதையில் ரகளை செய்வதாக, முத்தியால்பேட்டை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள், முத்தியால்பேட்டையை சேர்ந்த சபரிநாதன்,29; மணிகண்டன், 40, என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். அதே போல, வில்லியனுார் கணுவாப்பேட்டையில் போதையில் ரகளையில் ஈடுபட்ட வில்லியனுாரை சேர்ந்த சுரேஷ், 43, என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை