உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரி, 100 அடி சாலை, கொடிசாமி நகரைச் சேர்ந்தவர் ஜீவ பிரசாத் குமார், 38. இவர் ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், நெல்லிதோப்பைச் சேர்ந்த அருள்செல்வம் என்பவருடன் ஜீவ பிரசாத் குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இணைந்து ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்தனர். அந்த ஆன்லைன் வர்த்தகத்தில் அருள்செல்வத்திற்கு ரூ.30 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதால், அந்த நஷ்டத்திற்கு ஜீவ பிரசாத் குமார் தான் காரணம் என கூறி பணத்தைத் திரும்பத் தருமாறு அருள்செல்வம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் அருள்செல்வம், தந்தை முருகன், தாய் பிரியா ஆகியோருடன் ஜீவ பிரசாத் குமாரின் வீட்டிற்குள் அத்தமீறி நுழைந்து, அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, தாக்கினர். பணத்தை திரும்பக் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் மிரட்டல் விடுத்து, அங்கிருந்த எஸ்.பி.ஐ., வங்கி செக் புக்கை எடுத்துக் கொண்டு, 100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்றனர். இதுகுறித்து ஜீவ பிரசாத் குமார் புகாரின் பேரில், அருள்செல்வம் உட்பட மூவர் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ