உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் திருடிய 3 பேர் கைது

பைக் திருடிய 3 பேர் கைது

திருபுவனை: திருபுவனை அருகே பைக்திருட்டு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் (பொ) வீரபத்திரன்மற்றும் போலீசார் திருவாண்டார்கோவில் பஸ் நிறுத்தம் அருகேதீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அவ்வழியே பைக்கில் வேகமாக வந்த வாலிபரை மடக்கி விசாரித்தனர். அவர், கோட்டகுப்பம் அன்சாரி மகன் சலீம், 38, என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதுதெரியவந்தது.இதையடுத்து போலீசார் பைக்கைபறிமுதல் செய்து, சலீமை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர், திருபுவனையில் 3 பைக், வளவனுாரில் 2 பைக், முதலியார்பேட்டையில் 1 பைக் என மொத்தகம் 6 பைக்குகளை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் சலீமை கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த பைக்கை பறிமுதல் செய்தனர். அவர் திருடிய 5 பைக்குகளை கோட்டகுப்பம்கமாலுதீன், 20; ஷேக்மோதின் 35; ஆகியோரிடம் விற்றது தெரியவந்தது. இதையடுத்துஅவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி,பெரியகாலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை