உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலை விபத்தில் 3 பேர் காயம் 

சாலை விபத்தில் 3 பேர் காயம் 

பாகூர் : சாலை விபத்தில் சிறுமி உள்ளிட்ட மூன்று பேர் காயமடைந்தனர். கடலுார் மாவட்டம், பாலுார் திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 35; வெல்டர். இவர், கடந்த 26ம் தேதி, முதலியார்பேட்டையில் வசித்து வரும் தனது சகோதரி சூர்யா, 33, சகோதிரியின் மகள் சக் ஷிகாஸ்ரீ 11; ஆகியோரை, பஜாஜ் பிளாட்டினா, பைக்கில் ஏற்றிக்கொண்டு கடலுார் நோக்கி சென்று கொண்டிருந்தார். இடையார்பாளையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த டாடா ஏஸ் வேன் பைக் மீது மோதியது. நிலை தடுமாறி மூவரும் கிழே விழுந்து காயமடைந்தனர். அருகில், இருந்தவர்கள் அவர்களை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !