| ADDED : டிச 23, 2024 06:21 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், 3 பேரிடம் 7.59 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். வில்லியனுாரை சேர்ந்தவர் விசுவநாதன். இவரை தொடர்பு கொண்ட நபர், குறைந்த வட்டிக்கு 5 லட்சம் பணம் தருவதாக கூறினார். அதைநம்பி, செயலாக்க கட்டணமாக 49 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். அனிதா நகரை சேர்ந்தவர் கண்ணியம்மாள் அலெக்ஸ் வேணி. இவர் கடன் வாங்குவது தொடர்பாக, மோசடி கும்பலிடம் 1.36 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். ரெட்டியார்பாளையம் பவழ நகரை சேர்ந்தவர் ஜெயகுமாரி. இவர் பகுதி நேர வேலை தேடினார். டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபரிடம், ஆன்லைன் வழியாக படிப்படியாக 5.74 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். இதுகுறித்து, 3 பேர் கொடுத்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.