உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல்கலை., மாணவர்களின் புகாரின் பேரில் 3 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்; துணை பதிவாளர் மகேஷ் தகவல்

பல்கலை., மாணவர்களின் புகாரின் பேரில் 3 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்; துணை பதிவாளர் மகேஷ் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலையில் மாணவர்களின் புகாரை தொடர்ந்து மூன்று பேராசிரியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி பல்கலைக்கழக துணை பதவிவாளர் மகேஷ் கூறியதாவது: பல்கலை மாணவர்கள் சிலர் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் மீது, துணைவேந்தரின் உத்தரவின் படி உள்விசாரணைக்குழு விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம், மூன்று பேராசிரியர்கள் மீது வந்த புகாரை, பெண் பேராசிரியர் தலைமையிலான உள் புகார் குழு விசாரித்து, அளித்த அறிக்கையின் அடிப்படையில் மூன்று பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இந்த 3 புகார்கள் தான் எங்களுக்கு நேரடியாக வந்தது. காரைக்காலில் ஒரு பேராசிரியர் மீது சம்பந்தப்பட்ட மாணவியிடம் இருந்து புகார் வரவில்லை. இருப்பினும் குற்றச்சாட்டு பேரில், காரைக்காலில் உள்ள மாவட்ட அளவிலான புகார் குழு விசாரித்து வருகிறது. அந்த குழுவிற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்க சம்மந்தப்பட்ட பேராசிரியர் அந்தமான் நிக்கோபார் தீவிற்கு மாற்றப்பட்டுள்ளார். குற்றம் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அவரை பணி நீக்கம் செய்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் புகார் முறையாக வந்ததால், உள்புகார் குழுவால் விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால் காரைக்காலில் அப்படி இல்லை. கலெக்டர் விசாரணையை துவக்கி உள்ளார். அவரது விசாரணைக்கு பல்கலை நிர்வாகம் முழு ஒத்துழைப்பு தரும். யாரையும் பாதுகாக்கவும் இல்லை. மறைக்கவும் இல்லை. புதுச்சேரி பல்கலை நிர்வாகம், பாலியல் சம்மந்தமான குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான நிலைபாட்டில் உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை