உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போதையில் ரகளை: 3 வாலிபர்கள் கைது

 போதையில் ரகளை: 3 வாலிபர்கள் கைது

புதுச்சேரி: மது குடித்து பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஓதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள அண்ணா திடல் வழியில் நின்ற 3 வாலிபர்கள் மது போதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் ரகளை செய்வதாக, ஒதியஞ்சாலை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து போலீசார் அங்கு சென்று, 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கண் டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த பத்மநாபன்,19; பிரதாப், 24; கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகரை சேர்ந்த வடிவேல், 24, ஆகியோர் என்பது தெரியவந்தது. அதையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை