2 ஆண்டுகளில் ரூ.33 கோடி மோசடி
புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 33 கோடி ரூபாயை ஆன்லைன் மோசடி மூலம் பொதுமக்கள் இழந்துள்ளனர்.புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 49 கோடியும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 34 கோடி ரூபாயும் பொதுமக்கள் ஆன்லைன் மோசடி மூலம் இழந்துள்ளனர். இதில் ரூ. 9 கோடியே 52 லட்சம் ரூபாயை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் மீட்டுள்ளனர்.