உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது

புதுச்சேரி: ஏனாம் பிராந்தியம் மெட்டகுரு பகுதியில் உள்ள தனியார் கல்லுாரி அருகே சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற ஏனாம் வெங்கட்ரத்னம் நகர் சங்கதி மகேஷ் பாபு, 24; சீத்தராமபுரம், பிரதாப் நகர் கெட்டம் ராஜூ, 21; அய்யனா நகர் நானி, 22; விஜய துர்கா வரபிரசாத், 25, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி