உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் திருடிய 4 பேர் கைது

பைக் திருடிய 4 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் பைக் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து, 10 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் ரோந்து சென்றனர். அந்த வழியாக நம்பர் பிளேட் இன்றி பைக்கில் வந்த மூவரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள், வில்லியனுார், தட்டாஞ்சாவடி மோகன் பிரசாத், 18; கோபாலன் கடை சே ஷாத்ரி, 19; வி.மணவெளி நீலமணிகண்டன், 20; என்பதும் மூவரும் ஓட்டி வந்தது திருட்டு பைக் என, தெரிய வந்தது. விசாரணையில் மூவரும் மேலும் 2 இடங்களில் திருடி மறைத்து வைத்திருந்த 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். உருளையன்பேட்டை போலீசார் மறைமலையடிகள் சாலையில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அந்த வழியாக வந்த வாலிபரை மடக்கி விசாரித்தனர். அவர், கடலுார் மாவட்டம், மாளிகைமேடு, அரவிந்த், 25; என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு பைக் என தெரியவந்தது.அரவிந்த் புதுச்சேரியில் ரெட்டியார்பாளையம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 14 பைக்குகளை திருடியதை ஒப்பு கொண்டார்.அரவிந்தை கைது செய்த போலீசார் முதற்கட்டமாக 7 பைக்குகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி