உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபர் கொலை வழக்கு 4 பேரிடம் விசாரணை

வாலிபர் கொலை வழக்கு 4 பேரிடம் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரியில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி, ரோடியர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன், 33. இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த 2ம் தேதி இரவு வானரப்பேட்டை நேதாஜி நகரில் உள்ள அவரது மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கல்றை வீதியில் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றது. இச்சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கொலை தொடர்பாக நான்கு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை