மேலும் செய்திகள்
மது போதையில் ரகளை 8 பேர் மீது வழக்கு பதிவு
04-Nov-2026
புதுச்சேரி: புதுச்சேரியில் புகையிலை பொருட்கள் விற்ற நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். மேட்டுபாளையம் போலீசார் நேற்று (நவ.,5) முத்திரைப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே ரோந்து சென்றனர். அப்போது பள்ளிக்கு நுாறு மீட்டர் சுற்றளவில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற முத்திரைபாளையம் சிவக்குமார் என்பவர் மீது வழக்குப் பதிந்தனர். அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதே போல், குருமாம்பேட் பெட்டிக்கடையில் பள்ளிக்கு நுாறு மீட்டர் சுற்றளவில் புகையிலை பொருட்கள் விற்ற குருமாம்பேட் குமுதவள்ளி,63; என்பவர் மீது வழக்குப் பதிந்து. ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். குருமாம்பேட் டீ கடையில் புகையிலை பொருட்கள் விற்ற குமாம்பேட் ஜோசப், 29, என்பவர் மீது வழக்குப் பதிந்து, 20 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பெரியகடை போலீசார் நேற்று பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற வாழைக்குளம் டொமினிக் பீட்டர்,46; என்பவர் மீது வழக்குப் பதிந்தனர். அவரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
04-Nov-2026