4 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்
புதுச்சேரி; புதுச்சேரி போலீசில் 4 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் நியூட்டன் உணவு பாதுகாப்பு பிரிவில் இருந்து குற்ற பதிவேடுகள் பிரிவுக்கும், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சி.பி.சி.ஐ.டி.,க்கும், கிட்லா சத்யநாராயணா, பி.சி.ஆர்.பிரிவுக்கும், கடலோர காவல்படை வேலயன், குற்றம் மற்றும் நுண்ணறிவு சீனியர் எஸ்.பி., அலுவலகத்திற்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக சீனியர் எஸ்.பி., அனிதாராய் பிறப்பித்துள்ளார்.