பொது இடத்தில் ரகளை 4 பேர் கைது
பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பாகூர் போலீசார் நே ற்று முன்தினம் ரோந்து சென்றனர். சோரியாங்குப்பம் மேட்டு தெரு சந்திப்பு அருகே ரகளையில் ஈடுபட்ட கடலுார், இடையார்குப்பத்தை சேர்ந்த விஜயக்குமார், 34; மணமேடு ஏரிக்கரை சந்திப்பு அருகே ரகளையில் ஈடுபட்ட பண்ருட்டியை சேர்ந்த சந்துரு, 22, ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். இதேபோல், கிருமாம் பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, கன்னியக்கோவில் சந்திப்பு அருகே பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் பகுதியை சேர்ந்த கணேஷ், 36; பிரதீப், 29; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.