உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாசமாக பேசிய 4 பேர் கைது

ஆபாசமாக பேசிய 4 பேர் கைது

காரைக்கால் : காரைக்கால் நெடுங்காடு பகுதியில் நேற்று முன்தினம் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். கீழ்பொன்பேத்தி பாலத்தின் அருகில் நான்கு வாலிபர்கள் நின்று கொண்டு, மது போதையில் பொதுமக்களுக்கு இடையூராக ஆபாசமாக பேசினர். இது தொடர்பாக நெடுங்காடு பகுதியை சேர்ந்த வினோத்,25; ராஜ்குமார், 23; இளம்பருதி, 21; அஜய், 21, ஆகியோர் பேர் மீது நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை