உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 4 பேரிடம் ரூ. 36 ஆயிரம் மோசடி

4 பேரிடம் ரூ. 36 ஆயிரம் மோசடி

புதுச்சேரியில்: புதுச்சேரியை சேர்ந்தநபரை தொடர்பு கொண்ட ஒருவர், பைனான்ஸ் மூலம் குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக பேசினார். அதற்கு முன்பணம் கொடுக்க வேண்டும் என கூறியதை அடுத்து, அவர், ஆன்லைன் மூலம் 21 ஆயிரம் அனுப்பினார். பின்னர் அந்த நபரை தொடர் கொள்ள முடியாமல் போனதால், மோசடி கும்பல் என தெரிந்தது. மேலும், புதுச்சேரியை சேர்ந்த நபர், ஷிப்ட் கேஸ் என்ற லோன் ஆப் மூலம், ஆயிரம் கடன் வாங்கினார். மேலும், பணம் கட்ட வேண்டும் இல்லை என்றால் புகைப்படத்தை மார்ப்பிங் செய்யவதாக மர்ம நபர் மிரட்டினார். அதற்கு பயந்து, அவர் 10 ஆயிரம் பணத்தை அந்த நபரிக்கு அனுப்பி ஏமாந்தார். தொடர்ந்து, ஒருவர், தனது நண்பருக்கு பிறந்த நாள் பரிசு வழங்க, இணைய தள மூலம் 5 ஆயிரம் ரூபாய் கிப்ட் ஆர்டர் செய்தார். இதுவரை கிப்ட் பொருட் வராமல் மர்ம நபர் ஏமாத்தியுள்ளனர். இதுகுறித்து, 3 பேர் கொடுத்த புகாரின், பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை