மேலும் செய்திகள்
ஆபாசமாக பேசிய 4 பேர் கைது
21-Sep-2025
அரியாங்குப்பம்: மது போதையில், பொதுமக்களை ஆபாசமாக பேசிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பொது இடத்தில் நின்று கொண்டு 3 வாலிபர்கள், பொதுமக்களை ஆபாசமாக பேசுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்று, மூவரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள், பூரணாங்குப்பத்தை சேர்ந்த அருள்குமார், 36; ஆனந்தராமன், 26; ஆபாவாணன், 36; என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதே போன்று, அரியாங்குப்பம், காக்கையாந்தோப்பு பகுதியில் மது போதையில் ஆபாசமாக பேசிய, பாகூரை சேர்ந்த சரவணன், 41; என்பவரை அரியாங்குப்பம் போலீசார் கைது செய்தனர்.
21-Sep-2025