மேலும் செய்திகள்
கத்தியுடன் திரிந்த 2 பேர் கைது
26-Oct-2025
வில்லியனுார்: வில்லியனுார் பைபாஸ், ஆரியப்பாளையம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற ஐந்து பேரை போலீசார் மடக்கி, விசாரித்தனர். அவர்கள், சுல்தான்பேட்டை ஷமீர், 25; கணுவாப்பேட்டை ராஜூ, 29; அஜய், 24; கோட்டைமேடு நவீன், 28; வடமங்கலம் சுகுமாறன், 43, ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 ஆயிரம் ரொக்கம், மூன்று மொபைல் போன்கள், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
26-Oct-2025