உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி பிரபல ரவுடி உள்பட 5 பேர் கைது 

வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி பிரபல ரவுடி உள்பட 5 பேர் கைது 

புதுச்சேரி: முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் வெட்டி கொல்ல முயற்சி செய்த ரவுடி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.  புதுச்சேரி, பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் மகன் கோகுல், 18; இவர் கடந்த 11ம் தேதி நள்ளிரவு அவரது தம்பியுடன் டீ குடிக்க வெளியே சென்றார். பின் ரத்த காயங்களுடன் கோகுலை அவரது தம்பி வீட்டிற்கு அழைத்து வந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய் செல்வி, கோகுலை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, செல்வி கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில், கோகுலின் தம்பியை கண்டாக்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஹேமநாத் என்பவர்,  மணிகண்டன் வீட்டிற்கு  அழைத்து சென்றார். அங்கு பிரபல ரவுடி பாண்டா மணி(எ) மணிகண்டன், பிரதாப், பத்து (எ) பத்மநாபன், சூர்யா, பொட்டலம் சஞ்சய், ஆர்யா, கரி மற்றும் ஹேமநாத் ஆகியோர் இருந்துள்ளனர்.  அப்போது அவரை அந்த கும்பல் சரமரியாக தாக்கியுள்ளனர்.  பின் பிரதாப் என்பவர் மூலம் கோகுலை  வரவைத்து மணிகண்டன் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு கோகுலிடம் என்னம் திட்டம் தீட்டியுள்ளீர்கள் என கேட்டு மணிகண்டன் கத்தியால் கோகுலில் காலில் குத்தியுள்ளார். அப்போது கொலை செய்வதற்காக வேவு பார்த்ததாக கோகுல் தெரிவித்தார். அப்போது வீட்டில் இருந்த மணிகண்டனின் மனைவி ஹரிணி, அவரை வீட்டில் இருந்த வெளியே அழைத்து சென்று கொலை செய்துவிடுங்கள் என தெரிவித்துள்ளார்.  இதையடுத்து மணிகண்டன், கோகுலை வீட்டின் வெளியே அழைத்து சென்றபோது, மணிகண்டனின் அக்கா சந்தியா, பிரதாப், பத்மநாபன், சூர்யா, ஹேம்நாத் ஆகியோர் கோகுலை பிடித்துக் கொள்ள, மணிகண்டன் கோகுலை கத்தியால் வயிறு மற்றும் கழுத்தில் குத்தினார். ரத்து வெள்ளத்தில் கீழே விழுந்த கோகுலை அவரது தம்பி வீட்டுக்கு அழைத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து  பாண்டா மணி (எ) மணிகண்டன், பிரதாப், சூர்யா, பத்து (எ) பத்மநாபன், சூர்யா 5 பேரை கைது செய்தனர்.  மணிகண்டனின் உறவினர்களை போலீசார ்தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ