சைபர் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்த 5 பேர்
புதுச்சேரி : புதுச்சேரியில் 5 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ. 4. 70 லட்சம் லட்சம் இழந்துள்ளனர்.புதுச்சேரி, கோவிந்தசாலையை சேர்ந்தவர் ஆயிஷா பீவி. இவரை தொடர்பு கொண்ட நபர், ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார்.இதைநம்பி ஆயிஷா பீவி, பல்வேறு தவணைகளாக 2 லட்சத்து 95 ஆயிரத்து 145 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். இதேபோல், பகுதி நேர வேலையாகமர்ம நபர் தெரிவித்த நிறுவனங்களில் லாஸ்பேட்டை பாண்டியன் வீதியை சேர்ந்த எழிலரசி, 1 லட்சத்து 43 ஆயிரம், குயவர்பாயைம் திருமால் நகரைச் சேர்ந்த பாலசந்தர் 10 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்தனர்.கல்மண்டபத்தை சேர்ந்த பிரபாகரன், 16 ஆயிரம், புதுச்சேரி கிருஷ்ணா நகர், 13வது குறுக்கு தெருவை சேர்ந்த பாலாஜி 5 ஆயிரத்து 800 என, 5 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 4 லட்சத்து 69 ஆயிரத்து 945 ரூபாய் ஏமாந்துள்ளனர்.இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.