உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆன்லைன் மோசடி கும்பலிடம் 5 பேர் ரூ.18 லட்சம் இழந்தனர்

ஆன்லைன் மோசடி கும்பலிடம் 5 பேர் ரூ.18 லட்சம் இழந்தனர்

புதுச்சேரி: ஆன்லைன் மோசடி கும்பலிடம் புதுச்சேரியை சேர்ந்த 5 பேர் ரூ. 18 லட்சம் இழந்து ஏமாந்தனர்.தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் சந்திரகாந்த், 25. இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக சம்பாதிக்கலாம் எனக் கூறினார். இதைநம்பிசந்திரகாந்த், 11 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். இதேபோல், ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி, தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு, தனது வாடிக்கையாளரை போன்று, மெயில் ஒன்று வந்துள்ளது.அதில், தன்னுடைய வங்கி கணக்கு மாற்றப்பட்டுள்ளதால், தற்போது அனுப்பும் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்துமாறு கூறப்பட்டிருந்தது.இதை உண்மை என நம்பிய கார்த்தி, அந்த வங்கி கணக்கிற்கு, 5 லட்சத்து 38 ஆயிரத்து 106 ரூபாய் செலுத்தி ஏமாந்துள்ளார்.முத்தியால்பேட்டை சேர்ந்த ஸ்ரீதரன் ஆன்லைனில் லோன் பெறுவதற்காக செயலாக்க கட்டணமாக 1 லட்சம், புதுச்சேரி தேவகி நகரை சேர்ந்த நந்தினி, ஆன்லைன் பகுதி நேர வேலைக்காக 13 ஆயிரத்து400, முத்தியால்பேட்டை சேர்ந்த நர்மதா தேவிஆன்லைனில் லாட்டரி சீட்டு வாங்கி 38 ஆயிரத்து 110 ரூபாய் என மொத்தம் 5 பேரும் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 18 லட்சத்து 3ஆயிரத்து 616 ரூபாய் இழந்துள்ளனர்.இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ