உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  5 பேரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி

 5 பேரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரி, மடுகரையை சேர்ந்தவரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பெயரில் லிங்க் ஒன்று வந்துள்ளது. அதனை மொபைலில் பதிவிறக்கம் செய்து, தனது வங்கி விவரங்களை பதிவிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்த ரூ. 20 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்து ஏமாற்றியுள்ளது. இதேபோல், தவளக்குப்பத்தை சேர்ந்த பெண், இன்ஸ்டாகிராமில் துணி ஆர்டர் செய்து 8 ஆயிரத்து 500, முதலியார்பேட்டையை சேர்ந்த பெண் 10 ஆயிரம், பாக்கமுடையன்பேட்யை சேர்ந்த பெண் 5 ஆயிரம், ரெயின்போ நகரை சேர்ந்தவர் 7 ஆயிரம் என, 5 பேர் ரூ.50 ஆயிரத்து 500 இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி