உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூதாட்டி வீட்டில் 5 சவரன் திருட்டு

மூதாட்டி வீட்டில் 5 சவரன் திருட்டு

அரியாங்குப்பம்: தனியாக வீட்டில் இருந்த மூதாட்டி வீட்டில் 5 சவரன் தங்க நகைகளை திருடி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீராம்பட்டினம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மதுரை இவரது மனைவி வல்லத்தாள் (எ) ஜெயம், 89; வீட்டில் தனியாக வசித்து வருகிறார். மதுரையை சேர்ந்த பாண்டி செல்வி என்பவர் வல்லத்தாள் வீட்டில் சம்பளத்திற்கு தங்கி அவருக்கு உதவி செய்து வருகிறார். இந்நிலையில், மதுரையில் இருந்து புதுச்சேரிக்கு வந்த, பாண்டி செல்வியின் சகோதரி மற்றும் சகோதர் ஆகியோருடன், கடந்த 27ம் தேதி, மதுரைக்கு சென்று வருவதாக, வல்லாத்தாளிடம் கூறிவிட்டு பாண்டி செல்வி சென்றார். அதுவரை வல்லத்தாளுக்கு உதவியாக, அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் ஒருவர் வந்து தங்கியிருந்தார். இந்நிலையில், வீட்டில் இருந்த அலமாறியை வல்லத்தாள் திறந்து பார்க்கும் போது, உள்ளே இருந்த 5 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது. அதன் மதிப்பு 4.5 லட்சம் ரூபாய் ஆகும். பல இடங்களில் தேடியும் நகை கிடைக்கததால், அவர் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, நகையை திருடி நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை