| ADDED : டிச 23, 2025 04:42 AM
புதுச்சேரி: நல்லாட்சி வார விழாவையொட்டி புதுச்சேரி கால்நடை மருத்துவமனைகளில் வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது. புதுச்சேரி கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 9 கால்நடை மருத்துவமனைகளில், கடந்த 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை நல்லாட்சி வார விழா நடந்து வருகிறது. அதையொட்டி நேற்று புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனையில், வளர்ப்பு பிராணிகள் பூனை, நாய்களுக்கு இணை இயக்குனர் காந்திமதி தலைமையில் வெறிநோய் தடுப்பூசி மற்றும் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சலை தடுக்க தடுப்பூசியும் போடப்பட்டது. தொடர்ந்து கால்நடை நல சிகிச்சை முகாமில், தட்டாஞ்சாவடியில் 95 , பாகூரில் 131, அரியாங்குப்பம் 130, திருக்கனூரில் 152 என மொத்தம் 508 மாடுகளுக்கு வைத்தியம் பார்த்தல் மற்றும் மலட்டுத்தன்மை நீக்கல் சிகிச்சையும், 45 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பால் உற்பத்தியை பெருக்கும் வண்ணம் கால்நடைகளுக்கு சத்து மாவு, டானிக் வழங்கப்பட்டது. முகாமில் கால்நடை துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர், இணை இயக்குனர் குமரன், ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள். கலந்து கொண்டனர்.