பாகூர் தாலுகாவில் 52 நிவாரண முகாம்
பாகூர், : புதுச்சேரிக்கு கன மழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாகூர் பகுதியில் தாசில்தார் கோபாலக் கிருஷ்ணன் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள், ஊழியர்கள் மழை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பாகூர் தாலுகாவில், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதற்காக, பாகூர் தாலுகாவில் 52 மழை நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள், அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கி கொள்ளலாம் என, தாசில்தார் தெரிவித்துள்ளார்.