உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆன்லைன் மோசடி கும்பலிடம் 6 பேர் ரூ.9.90 லட்சம் இழப்பு

ஆன்லைன் மோசடி கும்பலிடம் 6 பேர் ரூ.9.90 லட்சம் இழப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று முன்தினம் 6 பேர், ஆன்லைன் மோசடி கும்பலிடம் 9.90 லட்சம் ரூபாயை இழந்தனர். புதுச்சேரியை சேர்ந்த கனகவள்ளி என்பவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதி நேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய கனகவள்ளி ஆன்லைன் வர்த்தகத்தில் பல தவணைகளாக 5 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார். இதேபோல், நடேசன் நகரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் 1 லட்சத்து 15 ஆயிரத்து 520 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். அரியாங்குப்பம் பாலசுந்தரம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 708 ரூபாய், கோவிந்தசாலை சரண்யா 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய், சண்முகாபுரம் கணேசன் 87 ஆயிரத்து 880 ரூபாய், கணேஷ் கிருஷ்ணா 5 ஆயிரத்து 500 ரூபாய் என மொத்தம் 6 பேர் நேற்று முன்தினம் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ. 9 லட்சத்து 89 ஆயிரத்து 608 இழந்துள்ளனர்.இதுகுறித்த, புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை