6 பேரிடம் ரூ. 2.89 லட்சம் அபேஸ் மோசடி கும்பல் கைவரிசை
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 6 பேர் ரூ. 2 லட்சத்து 89 ஆயிரம் இழந்துள்ளனர். லாஸ்பேட்டை சேர்ந்த பெண் ஒருவர், போலி இணையதளத்தில் தனது ஏ.டி.எம்., கார்டு விவரங்களை பதிவு செய்தார். அவரது வங்கி கணக்கில் இருந்து 18 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் எடுத்துள்ளார்.சண்முகாபுரத்தை சேர்ந்த நபரை, தொடர்பு கொண்ட மர்ம நபர் முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ் கடன் பெற்று தருவதாகவும், அதற்கு செயலாக்க கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதைநம்பி அவர், 6 ஆயிரத்து 800 ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.ரெயின்போ நகரை சேர்ந்தவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர், ஆன்லைனில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பி அவர், 5 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்தார். லாஸ்பேட்டையை சேர்ந்த ஒருவர், பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை நம்பி, 8 ஆயிரம் ரூபாய்க்கு கார் முகப்பு கண்ணாடி ஆர்டர் செய்து ஏமாந்தார். பாகூரை சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் எடுத்துள்ளார். கலைவாணர் நகரை சேர்ந்த ஒருவர், ஆன்லைன் மூலம் 2 ஆயிரம் ரூபாய்க்கு ஆன்லைனில் கை கடிகாரம் மறறும் இயர் பட்ஸ் ஆர்டர் செய்தார். அவருக்கு 400 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மட்டுமே வந்துள்ளது. இதுபோது, மோசடி கும்பலிடம் 6 பேர், 2 லட்சத்து 89 ஆயிரத்து 800 ரூபாய் இழந்துள்ளனர். புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.