உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாண்லே ஊழியரிடம் 6 சவரன் செயின் பறிப்பு மேட்டுப்பாளையத்தில் துணிகரம்

பாண்லே ஊழியரிடம் 6 சவரன் செயின் பறிப்பு மேட்டுப்பாளையத்தில் துணிகரம்

புதுச்சேரி: ஸ்கூட்டரில் சென்ற பாண்லே ஊழியரிடம் 6 சவரன் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீ சார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, சண்முகாபுரம், ராம் நகரை சேர்ந்தவர் அசோகன் மனைவி விஜயலட்சுமி,38; பாண்லே அலுவலகத்தில் சீனியர் அசிஸ்டென்ட். இவர் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு கதிர்காமத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்த தனது இரு மகள்களை அழைத்து கொண்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டார். மேட்டுப்பாளையம் இன்டஸ்ட்ரியல் ரோடு வழியாக ராம் நகர் செல்வதற்காக டிவைடர் அருகே நின்றபோது, பின்னால் சிகப்பு நிற பைக்கில் வந்த நபர், விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தாலி செயினை பறித்தார். திடுக்கிட்ட விஜயலட்சுமி கூச்சலிட்டார். ஆனால், அதற்குள் மர்ம நபர் தப்பிச் சென்றார். மர்ம நபர் பறித்து சென்ற தாலி செயினின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இதுகுறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ