ஆரோவில் அறக்கட்டளையின் 68வது ஆட்சி மன்ற கூட்டம்
வானுார் : ஆரோவில் அறக்கட்டளையின் 68வது ஆட்சி மன்ற கூட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் பல்வேறு கட்ட திட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.இது தொடர்பாக விவாதிக்கும் கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம்.நேற்று ஆரோவில் அறக்கட்டளையின் அலுவலக மாநாட்டு அறையில் 68வது ஆட்சி மன்றக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, தமிழக கவர்னர், ஆரோவில் அறக்கட்டளை தலைவர் ரவி தலைமை தாங்கினார். புதுச்சேரி கவர்னர், அறக்கட்டளை உறுப்பினர் கைலாஷ்நாதன், அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், அறக்கட்டளையின் செயல்பாடுகள், தற்போதைய திட்டங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்து விரிவான விவாதம் நடந்தது.மேலும், ஆரோவில் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.