7 பேரிடம் ரூ.1.59 லட்சம் மோசடி
புதுச்சேரி: முத்திரையார்பாளையத்தை சேர்ந்த பெண், இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பயன்படுத்தும் படங்கள் தொடர்பான பொருட்கள் விளம்பரத்தை பார்த்து, ஆர்டர் செய்து, 76,499 ரூபாய் ஏமாந்தார். தொண்டமாநத்தத்தை சேர்ந்தவர் 13,784, முத்திரையார்பாளையம் நபர் 21,478, சண்முகபுரம் நபர் 24,000, உப்பளம் நபர் 5,993, லாஸ்பேட்டை நபர் 12,600, தர்மபுரியை சேர்ந்தவர் 5,000 என, 7 பேர் மோசடி கும்பலிடம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 354 ரூபாய் ஏமாந்தனர். சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.